“முதியோர் சிறப்பு அனுபவத்தின் இருப்பு”
வளர்மதி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகர் பொன் நாகமணி அவர்களின் 25வது ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு முதியோர் கௌரவிப்பும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை பி.ப 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வினை திரு. க. திவாகர் தலைமை தாங்கவுள்ளார். நிகழ்வின் தலைமை விருந்தினராக திரு. த. கனகராஜா [கைதடி முதியோர் இல்ல அத்தியாட்சகர்] அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி . பி. சுவீட்டா [சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேசசபை, சாவகச்சேரி] மற்றும் திருமதி . த. பாலசுப்பிரமணியம் [அதிபர்- யா / மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம் சாவகச்சேரி] அவர்களும் கௌரவ விருந்தினராக திரு. கு. லிகிதராஜ் [நிலைய அங்கத்தவரும் நலன்விரும்பியும்- டென்மார்க்] அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆரம்ப நிகழ்வான மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து இறைணக்கமும் ஸ்தாபகரின் பாரியார் அவர்களால் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும் நடைபெறும். தொடர்ந்து வரவேற்பு நடனமும் வளர்மதி மாதர் அபிவிருத்திச் சங்க உபசெயலாளர் திருமதி . சி. சுதாஜினியின் வரவேற்புரையும் இடம்பெறும்.
தலைமையுரை, முதியோர் கௌரவிப்பு, கற்றல் உபகரணங்கள் வழங்கல், ஸ்தாபகர் நினைவுப் பேருரை என்பவற்றைத் தொடர்ந்து விருந்தினர் உரைகளும் நன்றியுரையும் நடைபெறும். அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைப்பதுடன்
கொவிட் இடர்கால நிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நிலைமைகளுக்கு அமைவாகவே நிகழ்வுகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.