இரண்டாவது லங்கா பிறீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச அரங்கில் இன்று இரவு 7.30 க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
போட்டியில் Galle Gladiators மற்றும் Jaffna Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதேவேளை, கடந்த வருடம் இடம்பெற்ற முதலாவது லங்கா பிறீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் Galle அணியை 53 ஓட்டங்களினால் வீழ்த்தி Jaffna அணி கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.