இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது படங்கள் போதைப்பொருள் சார்ந்த கதையம்சம் கொண்டதாக இருப்பதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.
’கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய மூன்று படங்களிலும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட கதை ஏன், என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள , லோகேஷ் கனகராஜ் ’இது சமூக அக்கறையின் காரணமாக ஏற்பட்ட விடயம் எனவும் நான் இயக்கும் படங்கள் வெறும் பொழுதுபோக்கு படங்களாக அமைந்து விடாமல் சமூக அக்கறையுடன் ஒரு தகவல் சொல்வதாக வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு உருவாக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருளுக்கு எதிராக கமல்ஹாசன், விஜய் போன்ற பிரபல நடிகர்கள் பேசினால் ‘ போதைப் பொருள் அற்ற ஒரு சமூகம் ஏற்பட வாய்ப்பு உண்டு, போதைப்பொருளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும்’ என்றும் கூறியுள்ளார்.