இலங்கைசெய்திகள்

இலங்கையில் ‘லொக்டவுண்’ சொல்லுக்கு இனித் தடை!!

lockdown

செய்தியாளர் – சுடர்

‘லொக்டவுண்’ (முடக்கம்) என்ற சொல்லைத் தடை செய்யப்பட்ட சொல்லாகப் பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் நாட்டுக்கு இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் என்பதைத் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில், லொக்டவுண் என்ற சொல்லைத் தடை செய்யப்பட்ட சொல்லாக்குவதற்குத் தான் சுகாதார அமைச்சர் என்ற விதத்தில் தீர்மானித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டை முடக்குமாறு அனைவரும் கூறுவதானது, மிகவும் இலகுவான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு முடக்கப்பட்ட போதிலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை ஒரு ரூபாவினாலேனும் குறைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் இவ்வாறான நிலைமையை எதிர்நோக்கியுள்ள இந்தத் தருணத்தில், தம் மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை பொறுத்துக் கொண்டு, தமது நடவடிக்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

5 ஆயிரம் ரூபா விதம், மூன்று தடவைகள் தமது அரசு மக்களுக்கு நிவாரண உதவித் திட்டத்தை வழங்கியது எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button