சமையல் எரிவாயு இறக்குமதி தொடர்பிலான ஒப்பந்தத்தின் போதும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும் போதும், இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள உலக வங்கியின் நிதி மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம், சமையல் எரிவாயு கொள்வனவின் போது முழுமைான வெளிப்படை தன்மையை பின்பற்றுகின்றது.
அது மாத்திரமின்றி உலக வங்கியின் கண்காணிப்பின் கீழ் அனைத்து கொள்வனவு மற்றும் பணக்கொடுப்பனவுகளும் இடம்பெறுகின்றன.
மேலும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும் போது அனைத்து நடவடிக்கைகளும் அரச திறைசேரியின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் நிதி மோசடியானது எவ்வாறு இடம்பெறும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளதோடு, அவ்வாறான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.