இந்தியாசெய்திகள்

‘படைப்பு சங்கமம் 2021’ – இலக்கிய விழா!! [ படங்கள் இணைப்பு]

Literary Festival

‘படைப்பு சங்கமம் 2021’ மூன்றாண்டு இணைந்த நிகழ்வானது 11. 12. 2021 அன்று சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கம், தி.நகர், சென்னை என்னுமிடத்தில் உலகம் முழுவதிலுமிருந்து திரளாக கலந்துகொண்ட தமிழ் சொந்தங்களை இணைத்து இனிதே நடந்துள்ளது.
இந்நிகழ்வில் 83 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 400க்கும் மேற்பட்ட விருதுகள், கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கான பரிசுகள், கவிதைப்போட்டி பரிசுகள், இலக்கிய விருதுகள் என இரண்டு வருடங்களாக சேர்ந்திருந்த தன் கடமைகளை நிறைவேற்றியிருக்கிறது படைப்பு குழுமம்.

இயக்குநர் மாரி செல்வராஜ், எழுத்தாளர் இந்திரன் ராஜேந்திரன், எழுத்தாளரும் நடிகருமான ஜெயபாலன், எழுத்தாளர் கதிர் பாரதி, கவிஞர் பாடலாசிரியர் அருண்பாரதி, நடிகர் மகேஷ் (விஜய் டிவி), தமிழன் பிரசன்னா, ஆகியோர் மதிப்புமிகு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வண்ணதாசன் மற்றும் யூமா வாசுகி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளனர். பல வளர்ந்து வரும் படைப்பாளர்கள் படைப்பின் விருதினை பெற்று மகிழ்வோடு முகநூலில் பகிர்ந்திருந்தனர்.
இக்குழும நிர்வாகி மதிப்பிற்குரிய கவிஞர் முகமட் அலி ஜின்னா மற்றும் அவரோடு இணைந்த இலக்கியவாதிகள் இப்பணியினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகு பணியை செவ்வனே மேற்கொண்ட நிர்வாகி மற்றும் குழும அங்கத்தவர்களைப் பாராட்டுவதுடன் படைப்பு குழுமத்தின் இலக்கிய பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறது ஐவின்ஸ்தமிழ் இணையதளம்…

Related Articles

Leave a Reply

Back to top button