இலங்கைசெய்திகள்

இரண்டாவது தடவையாகவும் லிந்துலை நகர சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டது!!

linthulai

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் இரண்டு மேலதிக வாக்குகளால் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பின் இரண்டு உறுப்பினர்களும் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த 7ஆம் திகதி நகரசபை தலைவரினால் அடுத்த ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்பட்டு அன்றைய தினமும் பாதீடு இரண்டு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்தநிலையில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் சபை தலைவர் லெட்சுமன் பாரதிதாசனால் இன்று முன்வைக்கப்பட்டது.

இதன்போது பாதீட்டு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுகையின் கீழ் உள்ள தலவாக்கலை – லிந்துலை நகர சபையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும் சுயாதீன கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் அதில் அங்கம் வகிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button