மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் புலம்பெயர் வாழ் உறவுகளின் நிதி அனுசரணையில் முன்னெடுக்கப்படும் தொழில் முயற்சி வாழ்வாதாரத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு, 28.10.2022 வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 4.30 மணிக்கு வளர்மதி நிலைய அரங்கில் இடம்பெறவுள்ளது.
மங்களவிளக்கேற்றல், இறை வணக்கம் ஆகியவற்றுடன் ஆரம்பிக்கும் இந்த நிகழ்வில் முதலில் நிலையத்தலைவரின் தலைமையுரை இடம்பெறவுள்ளது. தொடர்ந்து,
திட்டம் பற்றிய விளக்கம், திட்டம் கையளித்தல், பயனாளிகள் கருத்துரை, நன்றி உரை என்பன இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவடையவுள்ளது.
இந்நிகழ்வில் , மட்டுவில் கிராம வாழ் உறவுகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.