லிபியா நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் அல் திபய்பா பயணித்த மகிழுந்தின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைநகர் த்ரிபோலியில் இருந்து நேற்று (10) மகிழுந்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, அங்கு குறுக்கிட்ட சில மர்ம நபர்கள் பிரதமரின் மகிழுந்து மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும், இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் தற்போது உள்நாட்டுப்போர் நடந்து வருவதுடன் அரசியல் குழப்பமும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.