இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பத்திரிகை முன் பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

Lead news

  1. ஜப்பானிய நிதி நிறுவனமான ஜெய்க்கா இலங்கைக்கு வழங்கிய கடன் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை விரிவாக்கும் திட்டத்திற்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2. கடந்த யூலை 18 ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச்சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு வர்த்தமானியினூடாக குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


3. அடுத்த வாரத்தில் இருந்து மீனவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


4. இலங்கையின் மனித உரிமை நிவைவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  உயர் மட்டக் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையிலான  குழுவினர் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

நீதியமைச்சர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களையும் குறித்த குழுவினர் சந்திக்கவுள்ளனர்.


5. இலங்கையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்சில்  இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிராக “ஜனநாயகத்திற்கான இலங்கையர்கள்” என்ற குழுவினர் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


6. சீன கப்பலின் வருகையைப் பிற்போடுமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு சீன தூதரகம் இன்னும் பதில் வழங்கவில்லை.

பீஜிங்குடன் ஆலோசனை நடத்தி பதில் தருவதாக நேற்றைய தினம் சீன தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


7. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினது பிரதிநிதிகளும் நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


8. சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் முன்மொழிவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, போராட்டத்தின் உண்மையான மக்களின் எதிர்பார்ப்பை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான அம்சங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


9. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள் மூலம் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், பொருட்களுக்கான தட்டுப்பாடு குறைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்,

இதன் காரணமாகவே பொருட்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல பொருட்களின் விலைகள் குறைவடையும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.


10. நாளைய தினம் சமையல் எரிவாயு விலைக்குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிற்றோ நிறுவன தலைவரைக் கோடிட்டு இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 2000 ரூபா வரை விலைக்குறைப்பு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


11. எதிர்வரும் வாரத்தில் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளுக்கும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பாடசாலை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் வட மாகாணத்தில் ஐந்து நாட்களும் பாடசாலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தூரப்பிரதேசத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரம் பாடசாலைக்குச் சமூகமளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


12. இந்திய புலனாய்வு அமைப்பினரால் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோஸின் அகமட் என அடையாளம் காணப்பட்ட இவர் குறித்த அமைப்பிற்காக நிதி சேகரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


13 . குரங்கம்மை தொற்றை கண்டறியும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.

குரங்கு அம்மை நோய் தொற்றாளர்கள் நாட்டில் காணப்படுகின்றார்களா என்பது தொடர்பில் நாளை முதல் பரிசோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button