இலங்கைசெய்திகள்

சபாநாயகரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது நாடாளுமன்றம்! – எதிர்க்கட்சியின் பிரதம கொறடா குற்றச்சாட்டு!!

Laxman Kiriella

நாடாளுமன்றம் சபாநாயகரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பக்கச்சார்பாகச் செயற்படுவதைக் கண்டுகொள்ள முடியுமாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி எம்.பியான மனுஷ நாணயக்காரவைத் தாக்க முற்பட்டபோதும் சபாநாயகர் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சபாநாயகரின் கண்முன்னே நடைபெற்ற சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்காமல் குழுவொன்றை நியமிப்பது வேடிக்கையான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகரானதும் கட்சியின் பதவியைக் கைவிட வேண்டும் எனவும் இவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெலிகம பிரதேச அமைப்பாளராகச் செயற்படுகின்றார் எனவும் கிரியெல்ல எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர் சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button