இன்று (19) சட்டத்தரணிகள் குழாம் ஒன்றினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் கோரி காலி முகத்திடல் மைதானத்தில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள விரும்பினால், அதனை கோட்டை நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்காமல் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்ட மனுவில் சுமார் 100 சட்டத்தரணிகள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் கோட்டை காவல்துறையினர் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தனர்.