அமெரிக்வைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுவரை 47 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த 30 வயதான கைல் கோர்டி தற்போது 47 குழந்தைகளுக்குத் தந்தையாகி விட்டார். இன்னும் 10 குழந்தைகளுக்குத் தந்தையாக மாற உள்ளதாகத் தெரிவித்தார்.
விந்து தானம் செய்ததன் மூலம் இந்தக் குழந்தைகள் பிறந்துள்ளனர் எனவும் உயிரணுக்களை தானம் செய்வதற்கான தனது விருப்பத்திற்கு தான், ஒருபோதும் வருத்தப்படவில்லை எனவும் கூறும் அவர் தன்னுடைய இந்த முடிவு தனக்கான துணையைத் தேடுவதில் சிரமத்தைத் தந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
நான் தற்போது உயிரணுக்கள் தானம் செய்யும் உலகச் சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன், என் குழந்தைகளை வெளிப்படையாகச் சந்திக்கிறேன். இதைச் செய்வதன் மூலம் நான் பெறும் மகிழ்ச்சி உலகின் மிகச் சிறந்த உணர்வு என அவர் தெரிவித்துள்ளார்.