நேற்று இரவு முதல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் பதிவுகளில் கருத்துக்கள் பதிவிடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஊடக ஆய்வாளர் சஞ்சன ஹத்தொட்டுவ தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“2010 ஜனவரி 26ம் திகதி முதல் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேஸ்புக் பக்கங்களை ஆய்வு செய்து வருகின்றேன். யாரும் அவர்களின் உத்தியோகப்பூர்வ பக்கங்களில் கருத்துகளை பதிவிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை.
எனினும், இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதியான கோட்டாபய ராஜபக்ச முதன் முறையாக கருத்துகளை பதிவிடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.