உலகம்செய்திகள்

“மாஸ்க்”கிற்கு பதிலாக “கோஸ்க்” கண்டுபிடிப்பு!!

Kosk

சுமார் 2 வருடங்களாக கொரோனா காரணமாக நம்முடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய பொருளாக முகக் கவசம் மாறியுள்ளது. அவ்வப்போது வித்தியாசமான முகக் கவசங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான மூக்கு கவசம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மூக்கு கவசத்தை தென்கொரியாவைச் சேர்ந்த அட்மன் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த புதிய வகையான மூக்கு கவசத்திற்கு ‘கோஸ்க்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மூக்கு என பொருள் தரும் ‘கோ’ என்ற கொரிய மொழி சொல்லையும் மாஸ்க் என்ற ஆங்கில சொல்லையும் இணைத்து இந்த மூக்கு கவசத்திற்கு கோஸ்க் (Kosk) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிந்து கொண்டு பல சாதாரண செயல்களைச் செய்வதும் சிரமமான ஒன்றாக மாறி உள்ளது.

குறிப்பாக சாப்பிடும் போதும்அருந்தும்போதும் என முகக் கவசத்தைக் அடிக்கடி கழற்றி வைக்க நேரிடுகிறது. அடிக்கடி கழற்றி வைப்பதால் முகக் கவசத்தில் கிருமி பரவும் வாய்ப்பு கூட உள்ளது.

எனவே சாப்பிடும்போது மற்றும் அருந்தும்போது மூக்கை மட்டும் மூடிக்கொண்டு சாப்பிட வசதியாக இந்த மூக்கு கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button