இலங்கைசெய்திகள்

தவற விட்ட தங்க சங்கிலியை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு கிடைத்த பாராட்டு!!

Kilinochchi

 இரணைமடு கனகாம்பிகை ஆலய 6ம் நாள் பகல் திருவிழாவில் ஒரு அடியவர் 1 1/2 பவுண் தங்க நகையை ஆலய வாசலில் தவறவிட்டுள்ளார்.

பல முறை தேடியும் கிடைக்கவில்லை. அங்கு குடியிருந்த பல அடியவர் பலரின் பதில் இதுவாக இருந்தது இப்போது தங்கப் பவுண் விற்கின்ற விலைக்கு  கண்டெடுத்தவர்கள் தருவார்களா ? என்பதுதான் பலரது கதையாக இருந்தது. 

தங்கச்சங்கிலியை தவறவிடவர் அன்னையை வேண்டிக்கொண்டிருந்த வேளை கனாகம்பிகையின் அருளும் சிறுமியின் செயலும் சிலரை சிந்திக்க வைத்தது. எப்படி என்றால்  தவறவிட்ட தங்கச் சங்கிலியானது  4 1/2 வயதுக் குழந்தையின் கண்ணில் பட்டிருக்கின்றது. அவர் தான் கண்டெடுத்த தங்கச்சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்திருந்தார். 

அதன் காரணமாக கனகாம்பிகை அம்பாள் ஆலய பரிபாலன சபையினர் குழந்தைக்கு வாழ்த்துக்களையும் அன்பளிப்பு பரிசில்களையும் வழங்கி கௌரவப்படுத்தியிருந்தார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button