இலங்கைசெய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த துயரம்!!

Kilinochchi

கிளிநொச்சியில் இன்றைய தினம் அரச உத்தியோகத்தர்களுக்கு பெற்றோல் வழங்குவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கிளிநொச்சி மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிறைமாத கர்ப்பிணியான ஆசிரியை ஒருவர் கொளுத்தும் வெயிலுக்குள் வரிசையில் நின்றார்.

அவரை அவதானித்த போது அவரால் அந்த வரிசையில் நிற்க முடியாத நிலையில் நிற்பதனைக் காணமுடிந்தது. அவரது கணவரும் அருகில் இருந்தார்.

‘மனைவியை விட்டுவிட்டு நீங்கள் மாத்திரம் வந்திருக்கலாமே’ என்றோம்.அவரவருக்குதான் பெற்றோல் அடிப்பதாக தெரிவித்தனர் என்றார். உண்மையும் அதுவாகதான் இருந்தது.

ஏற்கனவே வைத்தியசாலையில் மனைவி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது தொழில் அடையாள அட்டையுடன் கணவன் வந்த போது திருப்பி அனுப்பியவர்கள் கிளினிக் காட்டை கொண்டுவருமாறு கூறியிருந்தனர்.

அந்த இளைஞனும் வைத்தியசாலைக்குச் சென்றுவருவதாக கூறிச் சென்றதனையும் அவதானித்தோம்.

இதன் போது நாம் அந்த நிறைமாத கர்ப்பிணி ஆசிரியை வரிசையில் நிற்க விடாது முன்னால் அனுப்புவதற்கு பெற்றோல் செட் வாசலில் நின்றவர்களுடன் உரையாடி அனுப்பிவிட அங்கு நின்றவர்கள் குறித்த ஆசிரியை மிக மோசமாக நடாத்தி, வாரத்தைகளால் புண்படுத்தி திருப்பி அனுப்பி விட்டார்கள்.

குறித்த ஆசிரியை மீண்டும் நாம் இருந்த வரிசைக்கு வந்த போது அவரிடம் ஏன் என விசாரித்தோம், அப்போது அவர் ” அங்கு நிற்பவர்கள் மனிதர்கள் அல்ல, அவர்களிடம் மிகக் கேவலமான வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு சென்றுதான் பெற்றோல் அடிக்க வேண்டும் என்ற நிலை வேண்டாம் இரவானாலும் பரவாயில்லை வரிசையில் நின்றே அடித்து விட்டுச் செல்வோம்” எனச் சொல்லிவிட்டு

சில மணித்தியாலயங்களின் பின்னர் எமது வரிசையில் நின்ற வேறு சிலர் ஆசிரியையின் நிலைமையினைக் கருத்தில் கொண்டு மீண்டும் முயற்சி செய்து அவரை பெற்றோல் அடிப்பதற்கு வழிவகுத்தனர்.

அதுவும் வசைபாடல்களுக்கு மத்தியில் தான்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று மாபியாக்களின் கைகளில். அவர்கள்தான் அதனைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

கறுப்புச் சந்தையில் அதிக விலைகளில் விற்பனை செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலைத்தின் பணியாளர்களுடன் இணைந்து மிக மோசமாக நடந்துகொள்கின்றார்கள்.

கர்ப்பிணித் தாய்மார்கள், தவிர்க்க முடியாது குழந்தைகளுடன் வருகின்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள், ஆசிரியர்கள், என எவரையும் அவர்கள் மதிப்பதாகத் தெரியவில்லை.

எனவே எரிபொருள் விநியோகத்தில் முறையான திட்டமிடல்கள், பொறிமுறைகள் மேற்கொள்ளாது விடத்து நிலைமைகள் மேலும் மோசமடையும். ஒரு சாதாரண இலங்கை குடிமகனாக இதனை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

Related Articles

Leave a Reply

Back to top button