கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களின் மூலமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்கக் கூடிய விலையினைப் பொறித்த அல்லது காட்சிப்படுத்திய அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு எதிராகவும் விலை காட்சிப்படுத்தாத அரிசி விற்பனையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக்கூறப்படுகிறது.