ஆயுதமேந்திய கும்பலொன்று, வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவரகளை கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
கட்சினா மாநிலத்தின் ஃபஸ்கரி மாவட்டத்தில் உள்ள மைருவா கிராமத்திற்கு வெளியே உள்ள பண்ணையொன்றில் கூலிக்கு பயிர்களை அறுவடை செய்து கொண்டிருந்த 39 சிறுவர்களை, உந்துருளியொன்றில் வந்த துப்பாக்கிதாரிகள் இவ்வாறு கடத்தியுள்ளதாக கட்சினா காவல்துறை செய்தித் தொடர்பாளர் காம்போ இசா கூறினார்.
பண்ணைக்குள் கொள்ளையர்கள் நுழைந்தபோது, அங்கு பணிபுரிந்த பெரியவர்கள் தப்பியோடியதாகவும், துரதிஷ்டவசமாக சிறுவர்கள் சிக்கிக்கொண்டதாகவும், சம்பவத்தை நேரில் அவதானித்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட சிறுவர்கள் 15 – 18 வயதுகளுக்கு இடைப்பட்டர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.