உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்த குற்றத்தின் கீழ் மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல சர்வதேச உணவு விற்பனை நிறுவனத்தின்மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களையும் மீட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகப் புகழ் பெற்ற கே.எப்.சீ நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் ஆகியோர் நேற்று(1) சுற்றி வளைத்தனர்.கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் உட்பட பொது சுகாதார பரிசோகர்கள் தாதிய மாணவர்கள் சுகாதாரத்துறை சார்ந்தோரும் பங்கு கொண்டனர்.
இதன்போது சுற்றுத்துண்டு இடாமல் பொதி செய்யப்பட்டு உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்திய உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டன.
குறித்த நிறுவனத்தின்மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சுகாதார அதிகாரிகள் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் எஸ்.தீபகுமாரன் தெரிவித்தார்.