பா .உ.ஹாபிஸ் நஸீரினால் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் பாதணி உற்பத்தி தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உப கரணங்கள் வழங்கல்!!
Kattankudy
செய்தியாளர் – சக்தி
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் பாதணி உற்பத்தி தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உப கரணங்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான ஹாபிஸ் சட்.ஏ.நசீர் அகமட் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியாஇ சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ்இ சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.மஜீட்இ சமுர்த்தி வலய முகாமையாளர்களான ஏ.எல்.இசட் பஹ்மிஇ எஸ்.எச்.முசம்மில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சௌபாக்கியா பாதணி உற்பத்திக் கிராமம் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாதணி உற்பத்தி தொழில் முயற்சியாளர் குழுக்களுக்கான பாதணி உற்பத்தி உபகரணங்கள் கையளிக்கப்பட்டதுடன் சமுர்த்தி பயணாளிகள் இரண்டு இலட்சம் குடும்பங்களை மேம்படுத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்கான தையல் இயந்திரங்களும் கையளிக்கப்பட்டன.