இந்தியாசெய்திகள்

ஹிஜாப் விவகாரம் – உயர்நீதிமன்ற தீர்ப்பு!!

Judgment

ஹிஜாப் அணியும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திய போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஹிஜாப் அணிவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில், நீதிபதிகள் கிருஷ்ண தீட்ஷித்.ஜே.எம். காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் விசாரணைகளை தொடங்கியது.

விசாரணை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ஹிஜாப் அணிய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

பின்னர் 11 நாட்களாக இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் ஹிஜாப் அணியும் விவகாரத்தில் அரசு பிறப்பித்த உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை என்றும், ஹிஜாப் என்பது முஸ்லிம் சமூகத்தில் அவசியமானவொன்றாக கருத முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி இல்லை என்றும் சகல மாணவர்களும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் வகையில் சீருடைகளை அணிந்து வரவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button