சுகிர்தராஜன் சுதந்திர பத்திரிகை அறத்தின் தூண். செய்தி மற்றும் தகவல்களை சேகரித்தல், மதிப்பீடு செய்தல், உருவாக்குதல் மற்றும் முன்வைத்தல் ஆகியவற்றின் செயல்பாடுதான் பத்திரிகையாளரின் முக்கிய கடமை என்று அவர் எப்போதும் செயற்பட்டார்.
இவ்வாறு வவுனியாவில் சுழர்ச்சிமுறையில் போராட்டம் மோற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் அனுப்பிய ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அவரின் கொள்கை ஊடகவியலாளர் நோக்கம் குடிமக்களுக்கு அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சமூகங்கள், மற்றும் அவர்களின் அரசாங்கங்கள் குறித்து சிறந்த முடிவுகளை எடுக்க தேவையான தகவல்களை வழங்குவதாகும்.என வழிகாட்டினார்.
அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அதன் அரசியல் சாசனத்தில்,முதலாவது சரத்து பத்திரிக்கை சுதந்திரம் ஆகும்.
நாம் அதிக ஊடகவியலாளர்களை இழந்து நிக்கிறோம்.
ஊடகவியலாளர் சுகிர்தராஜன் படுகொலை ஜனநாயகத்தில் நாகரீகமற்ற செயல்.
பத்திரிக்கையாளர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கோ.ராஜ்குமார்
செயலாளர்
செய்தியாளர் – கிஷோரன்