இலங்கையை புறக்கணித்த அமெரிக்க அதிபர் பைடன்!100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) இலங்கையை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய தென்னாசிய நாடுகளிற்கு பைடன் (Joe Biden) அழைப்பு விடுத்துள்ளார்.அத்துடன் தாய்வான், பிலிப்பைன்ஸ் மெக்சிக்கோ ஆகிய நாடுகளிற்கும் ஜோபைடன் (Joe Biden) அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் இலங்கைக்கு அவர் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுடன் சீனா மற்றும் ரக்ஷ்யா நாடுகளையும் அமெரிக்க ஜனாதிபதி புறக்கணித்துள்ளார்.அதேவேளை வரும் டிசம்பர் 9 – 10 திகதிகளில் 100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயக மாநாடு நடைபெறவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.