Breaking Newsஇலங்கைசெய்திகள்

இறந்த மகனின் சிறுநீரகத்தை தானம் செய்த பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்!!

Jaffna hospital

இறந்த மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ். போதனாவைத்தியசாலை நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சிறுநீரகம் இன்னொருவருக்கு பொருத்தப்பட்டு அவர் நலமுடன் வாழ்ந்து வருகின்றார்.

“தங்கராசா பிரிஞ்சன்” அவர்களின் சிறுநீரகம் உயிர் வாழ்கிறது.

சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால் அவதியுறும் இன்னொருவருக்கு, உயிர் வாழும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

அந்த வகையில் மேற்படி சிறுநீரக தானத்தை பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்கள் விருப்பத்தின் பெயரில் இன்னொருவருக்கு வழங்கியமையால் சிறுநீரக செயலிழப்பினால் அவதியுற்ற ஒருவர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் இன்று சுகமாக வாழ்கின்றார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர்கள் அண்மையில் வைத்தியசாலைக்கு அதிதிகளாக அழைக்கப்பட்டனர்.

அவர்களினால் சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மேலும் 3 சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திர பகுதி திறந்து வைக்கப்பட்டது.

மேலும் சிறுநீரக தானம் செய்தமைக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

மேற்படி 3 சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியவர்களுக்கு வைத்தியசாலை சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ பீடாதிபதி கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button