இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கு மாகாணமே இலங்கையின் போதைப்பொருள் மையம் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!!
jaffna
இலங்கையின் போதைப்பொருள் மையமாக வடக்கு மாகாணம் உள்ளதாக நீதி அமைச்சர் வீஜயதாச ராஜாபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உரிய தரப்பினரிடம் பேசவுள்ளதாகவும், காவல்துறை உள்ளிட்ட பொறுப்புகூறவேண்டிய அனைவரிடமும் தான் உரையாடவுள்ளதாகவும் தெரிவித்த அவர், வடக்கிலிருந்து வேறு மாகாணங்களுக்கும் போதைப்பொருள் கடத்தப்படுவது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் கூறியுள்ளார்.