தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் நேற்று புதன்கிழமை (ஒக்- 26) விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது.
போதைப்பொருள் பாவனையை ஒழித்தல், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், ப்ளாஸ்டிக் பாவனையை குறைத்தல், பாலின சமத்துவத்தை பேணல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையினரின் ஏற்பாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள், பிரதேச பை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் குறித்த பேரணியில் கலந்துகொண்டு தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தற்போது போதைப்பாவனை அதிகரித்துள்ளமையும் அதனால் இளைஞர்களின் மரணங்கள் இடம்பெறுவதையும் இவ்விடயம் குறித்து பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் ஆதங்கம் வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.