யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளைப் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட் களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
யாழ். போதனா வைத்தியசாலையில், போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமூகப் பிரதிநிதிகள், மதம்சார் வழிகாட்டிகள், சான்றோர்கள் இவ்விடயத்தில் அக்கறை கொள்ளுமாறும் விரைந்து நடவடிக்கைகள் எடுக்குமாறும் பொதுமக்கள், இளையோர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.