வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் வருபவர்களை திருட்டுக் கும்பல்கள் குறிவைப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் வருவோரைக் குறிவைத்து திருடர்கள் திட்டமிட்டு செயற்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் இவ்வாறு பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையால் வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் வருவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பாதுகாப்புடன் செயற்படுமாறும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.