நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டியும் எரிபொருள் தட்டுபாட்டைக் கண்டித்தும் வலி. மேற்கு பிரதேச இளைஞர்களால் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் து.சுஜிந்தன், சங்கானை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கேசவன் மற்றும் வலி. மேற்கு பிரதேச இளைஞர்கள் கலந்து கொண்ட இப்பேரணி சுழிபுரம் சந்திப்பகுதியில் இருந்து ஆரம்பமாகி சங்கானை பிரதேச செயலகம் வரை சென்று, பிரதேச செயலகத்திற்கு முன்னால் முற்றுகைப் போராட்டமாக மாற்றமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.