யாழ் மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் யாழ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற பிரபல தரம் 5 ஆசிரியரும் அன்பொளி கல்வி திலைய ஸ்தாபகருமான அமரர் வே. அன்பழகன் அவரகளுக்கு அவரது அதி தனித்துவ கற்பித்தல் திறமைமைப் பாராட்டி அவரது ஏகாந்த நிலையில் “புலமைச்சிகரம் “ எனும் கௌரவ பட்டமளித்து மதிப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த கௌரவ பட்டமளிப்பு ஐவின்ஸ் தமிழ் இணையத்தளத்தாலும் அதன் ஆயிரக்கணக்கான வாசகர்களாலும் அதன் கல்வி சார் வளவாளர்களாலும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கௌரவ பட்டமளிப்பானது நேற்று முன்தினம்(4/3/23) யாழ் நகரில் உள்ள அன்பழகனின் இல்லத்தில் இடம்பெற்றது.
ஐவின்ஸ் குழுமத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழவில்,
யாழ். மத்தியகல்லூரி அதிபர் கலாநிதி எஸ். கே. எழில் வேந்தன் , ஒய்வுபெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளரும் பிரபல எழுத்தாளருமான எஸ். மகேசன் ஆகியோர் பங்குபற்றி சிறப்புரையாற்றி, கௌரவ பட்டத்தை அன்பழகனின் குடும்பத்தினருக்கு கையளித்தார்கள்.
இந்த நிகழ்வில் ஐவின்ஸ் குழும தாயக இணைப்பாளர் இ. ஜனதன், தரம் 5 பிரபல வளவாளர்களான மானிப்பாய் இந்துக் கல்லூரி பிரதி அதிபர் து. திலீப்குமார், கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சண் சுதர்சன், மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் என். எஸ் . தீபன் , திரு /கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆசிரியர் ஆ. ஜெயநேசன் , யா/ மத்திய கல்லூரி ஆசிரியர் அளவையூர் ரமணன் , தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி ஆசிரியர் பத்மநேசன் ஆகியோரும் அன்பொளி கல்வி நிலைய பிரதிநிதிகள் , ஒய்வு பெற்ற அதிபரும் வளர்மதி கல்விநிலைய பொறுப்பாசிரியருமான எஸ். கிருஸ்ணன் ஆகியோரும் சமூக ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த பட்டமளிப்பை அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் பெற்று நன்றி செலுத்தியது மனங்களைக் கனக்கசெய்தது .இந்த வேளையில், புலமைச்சிகரம் வே. அன்பழகனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை ஐவினஸ் வாகரகளாகிய நாமும் பிராத்திப்போம்.