நெதர்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணத்தில் விவசாயம் செய்துவருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech விஜயம் மேற்கொண்டார்.
ஆழியவளை உலந்தைக்காடு இயற்கை விவசாயச் செய்கையை மேற்கொள்ளும் குறித்த பண்ணை, நெதர்லாந்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரினால் நடாத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பண்ணைக்கு விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்துத் தூதுவர் அவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தென்னை மற்றும் ஏனைய பயிர்செய்கைச் செயற்பாடுகள் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.
யுத்தத்தின் பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்களுடைய இன்றைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டதோடு மக்களின் வாழ்வாதார நிலை குறித்தும் அறிந்துகொண்டார்.
அதோடு விவசாயப்பண்ணையினால் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தமுடியுமென்றும் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளை இயற்கையாகவே மண்வளமும் , நீர்வளமும் கொண்ட யாழ்ப்பாண பூமியில் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் பலரும் இன்றளவும் விவசாயத்தையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.