கல்விமுக்கிய செய்திகள்

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்தும் கருத்தரங்கில் விசமிகள் அட்டகாசம்!!

ivinstamil

தரம் 5 மாணவர்களின் நலனை முன்னிட்டு ஐவின்ஸ்தமிழ் இணைதளமானது முற்றிலும் இலவசமாக நடாத்தும் கருத்தரங்கில் தொடர்ச்சியாக விசமிகள் அட்டகாசம் செய்து வருகின்றனர். திரையில் கிறுக்குவது மற்றும் தேவையற்ற வார்த்தைகளை எழுத்து வடிவில் பதிவிடுவது என தொடர்ந்தும் செய்து வருகின்றனர். இது முற்றிலும் மாணவர்களின் நலன்கருதி நடாத்தும் ஒரு கல்வி முன்னெடுப்பு நடவடிக்கையாகும். இதனைக் குழப்பும் நோக்கில் இவ்வாறான ஒரு செயற்பாடு நடைபெற்றுள்ளது.

கல்வியின் மதிப்பும் முக்கியத்துவமும் உணர்ந்தவர்களால் நிச்சயமாக இவ்வாறான காரியங்களைச் செய்யமுடியாது. இது சிறுவர்கள் பங்குபற்றும் ஒரு கருத்தரங்கு. இதனை குழப்பமுனைவது மிக அநியாயமான செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தொடர்ந்து இவ்வாறான நாசகாரச் செயலை செய்ய முற்பட்டால் தொழில் நுட்ப ரீதியாக உரிய விசமிகளை அடையாளம் கண்டு சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இவ் இடையூறுகளுக்காக / சில காலதாமதங்களுக்காக ஐவினஸ் தமிழ் குழுமத்தினராகிய நாம் மிகவும் மனம் வருந்துகின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button