இந்திய விண்ணாய்வு நிறுவனமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் மாணவர்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது விண்வெளி ஆராய்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தகவல் தொழில் நுட்பமே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் மனித சமூகம் இனி இயங்க முடியாது. மனிதனின் ஒவ்வொரு நிமிட வாழ்க்கையையும் இன்று விண்வெளித்துறை தீர்மானிக்கிறது. இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட 55 செயற்கைக்கோள்களும், விண்வெளியிலிருந்து பூமியை கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சியில் அதிகம் ஈடுபட வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் குமரி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர்,
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.