200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 190 நபர்கள் பெண்கள். இதில் 25 பெண் குழந்தைகளும் அடங்கும். ஈரானில் பெண்களின் போராட்டம் கொழுந்து விட்டு எரிகிறது. பெண்களை கட்டுப்படுத்தும் இஸ்லாமிய உடைகளை எதிர்த்து களத்தில் இறங்கியுள்ளார்கள்.
உலக வரலாற்றில் பெண்களே எந்த தலைமையும் இன்றி தன்னெழுச்சியாக கிளர்த்தெழுந்துள்ளார்கள். ஈரானின் அனைத்து நகரங்களிலும் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டிக்கொண்டும், ஹிஜாப்பை வீசியெறிந்து வீதிக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். நேற்று இஸ்லாமிய சட்டத்தை திரும்ப பெறமுடியாது என்றும் ஈரானை அசைக்கமுடியாது என்ற கோமேனியின் ஆணவப்பேச்சு பெண்களை வெகுண்டு எழச்செய்துள்ளது.
போராட்டத்தைத் தீவிரப்படுத்த பெண்கள் அறைகூவல் விடுத்துள்ளார்கள். எந்த வெளிநாட்டு ஊடகங்களுக்கும் ஈரானில் நுழைய அனுமதியில்லை. இந்தப்போராட்டம் இந்த நூற்றாண்டில் திருப்பு முனையாக இருக்கும் என கணிக்கிறார்கள். இந்தப்போராட்டத்தில் பெண்கள் வெற்றிபெற்றால் மதம்/அரசு போன்றவற்றை மறுபரிசீலனை செய்யவேண்டும். ஈரான் பெண்களின் போராட்டம் ஒரு முன் மாதிரி. பழைமைவாத இந்து ராஷ்ட்ரிய அரசுக்கு எதிராக இந்தியப் பெண்களும் வீதிக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஈரான் பெண்கள் செய் அல்லது செத்து மடி என்ற வைராக்கியத்துடன் இறங்கி”Woman, life, freedom” என முழக்கமிட்டு ‘The beginning of the end! என களத்தில் இறங்கியுள்ளார்கள். மதம்/அரசு ஆண்டாண்டு காலமாக பெண் உடலை ஒடுக்கி வருவதற்கு எதிரான இந்தப்போராட்டம் திருப்புமுனையாக இருக்கப்போகிறது.