செய்திகள்தொழில்நுட்பம்
பசிபிக் கடலில் சர்வதேச விண்வெளி மையத்தை மூழ்கடிக்க நாசா திட்டம்!!
International Space Station

சர்வதேச விண்வெளி மையத்தை 2031ஆம் ஆண்டு பசுபிக் பெருங்கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டுள்ளது.
2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வகம், பூமியிலிருந்து 227 கடல் மைல் தொலைவில் சுற்றி வருகின்றது. இந்நிலையில் அதன் ஆயுட் காலம் முடிவடைந்ததும் விண்வெளி மையத்தை பசுபிக் கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறியுள்ள நாசா அதிகாரிகள், தெற்கு பசுபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியான பாயிண்ட் நெமோ என்று அழைக்கப்படும் பகுதியில் சர்வதேச விண்வெளி மையத்தை விழ வைப்பதே திட்டம் என்று கூறியுள்ளனர்.