இலங்கைசெய்திகள்

நீராட நீர் நிலைகளுக்குச் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

Instruction

இலங்கையில் நீர் நிலைகளில் நீராடச் செல்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள அவரச எச்சரிக்கையில் பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுதல் மற்றும் நீரில் இறங்குவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை உயிர் காப்பு ஒன்றியத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நீர்நிலை குறித்து தெரியாதவர்கள் நீந்துவதன் மூலமான விபத்துக்களே அதிகளவில் பதிவாகி வருகின்றது என ஒன்றியத்தின் தலைவர் அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீரில் மூழ்கும் நபர் ஒருவரை நீச்சல் தெரியாதவர்கள் காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளினால் அதிகளவு மரணங்கள் பதிவாகி வருகின்றது.

மேலும், நீரில் மூழ்கும் நபர் ஒருவரை காப்பாற்ற முயற்சிக்கும் நீச்சல் தெரியாதவர்கள் சத்தம் போட்டு நீச்சல் தெரிந்தவர்களின் உதவியை கோர முடியும். கரையில் இருந்து கொண்டு கயிறு அல்லது ஏதேனும் ஓர் பொருளை வீசி அதனை பிடித்துக் கொள்ளுமாறு கோர முடியும்.

இந்நிலையில், நீரில் மூழ்குவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் பாதுகாத்துக் கொள்வது குறித்தும் பாடப் புத்தகத்தில் உள்ளடக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கை இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button