ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு இன்று காலை வருகை தந்த மாணவர்கள் 17 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (15) காலை 07.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையில் கட்டிம் ஒன்றுக்கு அருகாமையில் உள்ள பாரிய மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டினை கழுகொன்று மோதியதால் குளவி கலைந்து வந்து மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தரம் 06 தொடக்கம் 11 வரையான 09 மாணவர்களும் மற்றும் 08 மாணவிகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குளவிக் கொட்டு சம்பவம் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த அனைத்து மாணவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.ஏ.சத்தியேந்திராவின் பணிப்புரைக்கு அமைய பாடசாலை இன்று மூடப்படுவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.