உலகம்செய்திகள்

கல்வியை இழந்தனர் 61 கோடி மாணவர்கள்- யுனிசெப் வெளியிட்ட தகவல்!!

Information published by UNICEF

சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் அமைப்பு, கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் எனத்தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் பல நாடுகளில் இலட்சக்கணக்கான குழந்தைகள் அடிப்படைத் திறன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் அதனால் மன இறுக்கம், போதிய ஊட்டச்சத்து குறைவின்மை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை குழந்தைகள் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயதிற்குள்ளான குழந்தைகளில் 70 சதவீதம் பேர் சாதாரண வாசகங்களைக் கூட வாசிக்கக் கூடிய திறனற்று உள்ளதாகவும் பாடசாலையில் இடைநிற்றல் அளவு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக விரைவில் பாடசாலைகளை திறக்குமாறு உலக நாடுகளிடம் யுனிசெப் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button