இந்தியாசெய்திகள்விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கைது…

ஹரியாணா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதன்படி ,ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது யுஸ்வேந்திர சாஹல் சாதி குறித்து அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

அதையடுத்து யுவராஜ் சிங் தனது ட்விட்டர் கடந்த ஆண்டு பகிரங்க மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில் ‘‘நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி விட்டேன். ஒரு பொறுப்பான இந்தியனாக நான் வேண்டுமென்றே யாருடைய உணர்வுகளையாவது காயப்படுத்தியிருந்தால், நான் வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன்’’ என கூறியிருந்தார்

ஹரியாணாவில் தலித் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் கீழ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் ,நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பொலிஸார், 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தாம் கூறியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் மன்னிப்புக் கேட்பதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார். இந்த வழக்கில் அவர் ஏற்கெனவே மன்னிப்பு கோரியிருந்ததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்

Related Articles

Leave a Reply

Back to top button