சிறுவன் ஒருவனின் தலை பானைக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தமிழகத்தில் கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூா் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் தலை பானைக்குள் மாட்டிய நிலையில், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் பிரத்யேக கருவிகள் மூலம் பாத்திரத்தை வெட்டி பத்திரமாக தலையை மீட்டனா்.
பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனின் தலையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.