இந்தியாசெய்திகள்

விடுதலை செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

india

1991ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இந்திய உயர் நீதிமன்றினால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஏழு பேரில் பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டார்.

நளினி, சாந்தன், முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் குறித்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு இலங்கையர்களும் இந்தியாவில் இருந்து வெளியேறுவது குறித்து அரசாங்கத்தின் முடிவு நிலுவையில் இருப்பதன் காரணமாக அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரில் மூவர், ஐரோப்பிய நாடுகளில் தங்களது உறவினர்கள் வசிப்பதால் அந்த நாடுகளுக்கு செல்வதற்கு இணக்கம் வெளியிட்டனர்.

எனினும், சாந்தன் மாத்திரம் இலங்கை திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது ஆவணங்கள் மீதான பரிசீலனையும் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளமையே அவர் நாடு திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமாகும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button