இந்தியாசெய்திகள்

பிற்போடப்படும் சுக்ரயான்-1 திட்டம்!!

India

 இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ,  சுக்ரயான்-1 திட்டத்தை 2031ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கத்  திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக சுக்ரயான்-1 செயற்கைகோளை இஸ்ரோ அனுப்ப திட்டமிட்டுள்ளது.

நடப்பு ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவிருந்த இத்திட்டம், கொரோனா பிரச்சினை காரணமாக 2024ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் 2024ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

அதன் பிறகு திட்டத்தை தொடங்க மேலும் 8 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. எனவே இந்த திட்டத்தை 2031ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரோ பேராசிரியரும், விண்வெளி அறிவியல் திட்டத்தின் ஆலோசகருமான ஸ்ரீகுமார் மறைமுகமாக கூறியுள்ளார்.

19 மாதங்களுக்கு ஒருமுறை பூமிக்கு நெருக்கமாக வரும் வெள்ளி கிரகம் திட்டத்துக்காக இதுவரை மத்திய அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறவில்லை எனத் தெரிவித்த அவர், இதன் காரணமாக இந்த திட்டம் 2031ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படலாம் என கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button