தமிழகத்தின் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் 12 பேரை இன்று காலை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.
பட்டினிச் சாவில் இருந்து உயிரைக் காப்பாற்றி கொள்ள , வீட்டில் உள்ள நகைகளை விற்று பணம் 2 இலட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.