சீன உளவுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நிலையில்,பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய கடற்படையினர் அதிநவீன கப்பல்கள் மற்றும் ரேடார்கள் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதால், தென் இந்தியாவில் உள்ள இராணுவ நிலையங்களையும், அணுமின் நிலையங்களையும் அது கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இராமேஸ்வரம் கடற்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் வழமைபோல் கடலுக்குச் செல்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனக் கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னரே மீனவர்கள் வழமைபோல மீன்பிடிக்கச் செல்லமுடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.