இந்தியாசெய்திகள்

காணாமல் போன சோழர்காலச் சிலை மீட்பு!!

India

தமிழகத்தின் கும்பகோணம் தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் 52 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 12ஆம் நூற்றாண்டை ச் சேர்ந்த சோழர் காலத்துப் பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 1971ஆம் ஆண்டு கோயில் பூட்டு உடைக்கப்பட்டு பார்வதி, நடராஜர், கோலு அம்மன் உள்ளிட்ட 5 பஞ்ச லோக சிலைகள் திருடப்பட்டதாக வாசு என்பவர் அளித்த புகாரை விசாரித்த பொலிஸார் , அமெரிக்காவின் போன்ஹாம்ஸ் இல்லத்தில் 16 கோடிக்கு மேல் விற்பனை செய்ய திட்டமிடப்பட்ட 50 செ.மீ. உயரம் கொண்ட பார்வதி சிலையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சிலையை விரைவில் மீட்டு நடனபுரீஸ்வரன் சிவன் கோயிலில் வைக்கப்படும் என்றும் திருடப்பட்ட மற்ற 4 சிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.  

Related Articles

Leave a Reply

Back to top button