இந்தியாசெய்திகள்

தொடரும் உண்ணா நிலை போராட்டம் – ஐவர் கவலைக்கிடம்!!

india

திருச்சி, மத்திய சிறப்பு முகாமில் இன்று 6வது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 பேர் விடுதலைக்காகக் காத்திருக்கிறார்கள். சிறிதளவு உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் முழுமையாகப் பட்டினியாக இருந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ‘தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழ முடியாதா’ என்ற எண்ணத்தோடு காத்திருப்பவர்களின் ஏக்க குரலிது…

மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களே!!

“எத்தனை முறை எங்கள் குழந்தைகளை அள்ளிக் கொஞ்ச முடியாது தவித்திருப்போம், எங்கள் உறவுகள் உடல்நலம் முடியாமல் இறுதிக்கட்டங்களில் வைத்தியசாலைகளில் இருக்கும் போது ஒரு முறையாவது அவர்களைச் சந்தித்து உதவ முடியாதா என ஏங்கி இருப்போம். எங்கள் குடும்பங்கள் மிகவும் வறுமையில் இருக்கும் இந்த நிலையில் நாங்கள் அவர்களுக்கு உழைத்துக் கொடுக்க நாதி இல்லாதவர்களாக இந்த சிறையிலே தினமும் அழுது கொண்டு வாழ்கிறோம்….

ஐயா….இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறுமையின் காரணமாக தாங்கள் தாராள மனம் கொண்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளீர்கள்…. நாங்கள் இங்கு உமக்கு அருகிலேயே பட்டினியாக எங்கள் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்…
ஐயா, எங்களையும் ஒருமுறை கண்ணெடுத்துப் பார்த்து எங்கள் விடுதலைக்காக உதவி செய்யுங்கள், மிகவும் மிகவும் மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறோம்…
ஐயா எங்களை விடுதலை செய்து எங்கள் குடும்பங்களோடு வாழ விடுங்கள்…..

Related Articles

Leave a Reply

Back to top button