நேற்று முன்தினம் ஆந்திராவின் விசாக தீரத்தில் தங்கத்தேர் ஒன்று கரையொதுங்கியுள்ளது என மீனவர்களால் கடலோரக் காவல்ப்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அசானிப் புயலின் காரணமாக இந்த தங்கத்தேர் ஜப்பானில் இருந்து கடலில் அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கியதாக மீனவர்களால் கூறப்பட்டது எனினும் இது தங்க முலாம் பூசப்பட்ட தேர் என்பது தெரியவந்துள்ளது.
தேரின் மீது வெளிநாட்டு மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் தாய்லாந்து, ஜப்பான் அல்லது மலேசிய நாட்டு எழுத்துக்களாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் 16.1.22 என திகதியிடப்பட்டும் உள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இந்திய கடலோரக் காவல்ப்படை அதிகாரிகள் தேரில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் எந்த நாட்டைச் சேர்ந்தது, எந்த நாட்டில் இருந்து தேர் கடலில் மிதந்து வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.