உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் பேச்சு நடப்பதாகவும் இதன்படி ருமேனியா, ஹங்கேரி, போலந்து, கஜகஸ்தான் ஆகிய அரசுகளுடன் பேசி வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.