மரக்கறிகளின் விலை தொடர்பில் கொழும்பில் இன்று கருத்து தெரிவித்துள்ள சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், தற்போது இடைத்தரகர்களே இலாபத்தைப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு வர்த்தக நிலையத்தில் கரட் ஒரு கிலோகிராம் 300 ரூபாவாகவும், மற்றுமொரு வர்த்தக நிலையத்தில் 250 ரூபாவாகவும், பிறிதொரு இடத்தில் ஒரு கிலோகிராம் மரக்கறி 150 ரூபாவாக உள்ளது. இது எவ்வாறு நடக்கிறது.
இந்தப் பணம் அரசாங்கத்துக்குச் செல்லாது. எனவே, இது தொடர்பில் ஒரு கட்டுப்பாடு வரவேண்டும் என அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.